ராய்பூர் :

சத்தீஸ்கர் மாநிலம் தண்டிவாடாவில் மக்கள் தங்களின் அடிப்படை குடிநீர் தேவைக்கு கூட நன்னீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். அங்கு மக்கள் தண்ணீருக்காக வடிகால் ஒன்றில் குழிகளை வெட்டி எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்கள் சேகரிக்கும் நீர் மிகவும் அசுத்தமாக உபயோகத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஆனால், தங்களின் அன்றாட சமையல், குடிநீர் போன்ற அனைத்து அடிப்படை தேவைகளும் அதே நீரைத்தான் பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கின்றது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சௌரப் குமாரிடம் கேட்டபோது, பிரச்சனை தீர்ப்பதாக உறுதியளித்தார். கையால் செயல்படுத்தும் குழாய்கள் பற்றாக்குறையுள்ள இடங்களில் வசதிகள் செய்து தருவதாகவும் கூறியுள்ளார் என்றாலும் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பது அம்மக்களுக்கு துயரத்தையே அளிக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.