இரண்டு முறை உலகக்கோப்பை (1978,1986) சாம்பியன்,ஒலிம்பிக் தொடர்களில் இரண்டு முறை தங்கம் (2004,2008),இரண்டு முறை(1928,1996) வெள்ளி,14 முறை கோபா அமெரிக்கா சாம்பியன் பட்டம்…!தென் அமெரிக்க கண்டத்தில் அந்த கால்பந்து அணியின் பெயரை கேட்டாலே எதிரணிகள் அலறும்…! பிரேசிலின் பரம எதிரி…! தங்கள் அணி கோப்பையை வெல்லாவிட்டாலும் பிரேசில் அணி வெல்லக்கூடாது என நினைக்கும் ரசிகர்கள்..! அணியின் பெயர் அர்ஜென்டினா….

கால்பந்து உலகின் மிக வலுவான அணியாக கருதப்படும் அர்ஜென்டினா அணியின் சாதனைகளை அவ்வளவு எளிதாக விவரித்திட முடியாது.1930-ஆம் ஆண்டு உருகுவேயில் நடைபெற்ற முதல் உலகக்கோப்பை தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் அர்ஜென்டினா அணி இறுதி வரை முன்னேறி 4-2 என்ற கோல் கணக்கில் உருகுவேயிடம் வீழ்ந்து இரண்டாமிடம் பிடித்தது.1934-1974 ஆண்டிற்கு இடைப்பட்ட காலங்களில் அர்ஜென்டினா அணி பார்ம் பிரச்சனையால் லீக் சுற்றுகளிலேயே வெளியேறி சொதப்பியது.எனினும் 1966-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் மட்டும் காலிறுதியில் வரை முன்னேறி இங்கிலாந்திடம் வீழ்ந்தது.

1978-ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணியின் முன்கள வீரர் மரியோ கெம்பஸின் அசத்தலான வழிகாட்டுதலால் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.1982-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் எதிர்ப்பரவிதமாக லீக் சுற்றில் வெளியேறி அதிர்ச்சியளித்த அர்ஜென்டினா 1986-ல் மெக்ஸிகோவில் நடைபெற்ற தொடரில் நட்சத்திர வீரர் மாரடோனாவின் சிறப்பான ஆட்டத்தால் மீண்டும் உலகக்கோப்பையை முத்தமிட்டது.அதன் பின்பு 2014-ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஜெர்மனி அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து இரண்டாமிடம் பிடித்தது.இந்த உலகக்கோப்பையில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி 4 கோல்கள் அடித்தார்.
இந்நிலையில் 21-வது உலக கோப்பை கால்பந்து தொடர் அடுத்த மாதம் ரஷியாவில் நடைபெறுகிறது.இந்த தொடரில் பங்கேற்கும் அர்ஜென்டினா அணியின் வீரர்கள் பட்டியலை பயிற்சியாளர் கிறிஸ்டியன் அன்சால்டி வெளியிட்டுள்ளார்.

வீரர்கள் விபரம்:
கோல்கீப்பர்கள்: செர்ஜியோ ரொமெரோ,வில்லி கேபல்லோரோ,ஃபிராங்கோ ஆர்மணி

தற்காப்பு:ஃபெடரிகோ ஃபாசியோ,மார்கோஸ் ரோஜோ,மார்கோஸ் அகுனா, மார்கோஸ் ரோஜோ,நிக்கோலஸ் டாகலாஃபிகோ, மேர்காடோ,அன்சால்டி.நிக்கோலஸ் ஒட்டமண்டி.

நடுகளம்: எவர் பானேகா,ஜேவியர் மசூரினோ,லூகாஸ் பிக்லியா,ஏஞ்சல் டி மரியா,ஜியோவானி லோ செல்ஸோ,மானுவல் லான்ஸினி,கிறிஸ்டியன் பேவன்,மாக்ஸிமிலினோ மேசா,எட்வார்டோ சால்வியோ

முன்களம்:லயோனல் மெஸ்ஸி,பாலோ டிபலா,கோன்சலோ ஹூகுயின், செர்ஜியோ அகுரோரோ.

தற்போது அறிவிக்கப்பட்ட அர்ஜென்டினா அணியில் முன்கள செர்ஜியோ அகுரோரோ காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் அவருக்கு அணியில் இடம் அளித்தது ஏன்? என பல முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அர்ஜென்டினா அணியில் நட்சத்திர பலர் இருந்தாலும் ஒட்டுமொத்த அணியும் மெஸ்ஸியை நம்பியே உள்ளன.

“டி” பிரிவில் நைஜீரியா,ஐஸ்லாந்து,குரோஷியா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ள அர்ஜென்டினா அணி,தனது முதல் ஆட்டத்தில் ஐஸ்லாந்தை (ஜூன் 16-ஆம் தேதி) எதிர்கொள்கிறது.

7 -வது உலகக்கோப்பை:

7 -வது உலகக்கோப்பை தொடர் 1962ஆம் ஆண்டு சிலியில் நடைபெற்றது. 1960ல் சிலி நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தின் போது கால்பந்து மைதானங்கள் பெருமளவில் தேசமடைந்தன.

இருப்பினும் துரிதமான கட்டுமானப் பணிகளால் உலகக் கோப்பை தொடருக்கான ஏற்பாடுகள் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த உலகக் கோப்பை தொடரில் பிரேசில்
அணி செக்கோஸ்லோவேகியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பை தக்க வைத்துக் கொண்டது. இத்தாலி, சிலி அணிகள் மோதிய முதல் லீக் ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜியார்ஜியா பெரினி சிலியின் லாண்டாவுடன் மோதினார்.நடுவர் வெளியேறச் சொல்லியும் பெர்னி வெளியேற மறுத்தத்தால் காவல்துறையினர் வெளியே இழுத்துச் சென்றனர். அதன்பின் சிலியின் சான்சஸ் இத்தாலியின் மரியோ டேவிட் குத்துவிட இதற்கு பதிலடியாக சான்சஸ் தலையோ நோக்கி டேவிட் உதைத்தார். செக்கோஸ்

லோவேகியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் அணிநட்சத்திர வீரர் பீலே காயமடைந்தார். இருப்பினும் ஜகாலோகரீன்சா சிறப்பான ஆட்டத்தால் பிரேசில் அணி அரையிறுதி
க்கு முன்னேறியது. இது உலகக்கோப்பை கால்பந்து என்று கூறுவதை விட கலவரக்கோப்பை கால்பந்து என்றுதான் கூறவேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.