போபால்,
மத்தியப் பிரதேசத்திலிருந்து விசாகப்பட்டினம் சென்று கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் குவாலியரில்  இருந்து விசாகப்பட்டினம் சென்ற ஆந்திரா விரைவு ரயிலின்  ஏசி கோச்சில் தீப்பிடித்தது. இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில்  பி6 பி7  கோச்சுகளில் தீ பிடித்து எரிந்து உள்ளது. ரயிலில் தீப்பிடித்தவுடன் உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது . இதையடுத்து பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.