கராகஸ்
வெனிசுலா ஜனாதிபதியாக ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
வெனிசூலாவில் கடந்த 1999 முதல் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த 2013-ல் அப்போதைய ஜனாதிபதி சாவேஸ் காலமானதைத் தொடர்ந்து நிக்கோலஸ் மதுரோ புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார்.
இந்த  நிலையில் ஞாயிறன்று வெனிசுலாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் நிக்லோஸ் மதுரவை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் ஹென்றி பால்கோன்னுக்கு 21.2% சதவீத வாக்குகளும், மதுராவுக்கு 67% வாக்குகளும் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து நிக்கோலஸ் மதுரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மதுரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அவர்கள் என்னை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர். இது ஒரு வரலாற்று வெற்றி. ஒரு அழகான வெற்றி நாள் ஒரு உண்மையான கூட்டத்தின் வெற்றி நாள். ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது! அமைதி வெற்றிகண்டது! அரசியலமைப்பு, சட்டபூர்வமான முறையிலேயே இந்த தேர்தல் நடைபெற்றது” என்றார்.

பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் ஹென்றி ஃபால்கோன் வாக்குப்பதிவு முடிந்த பின், தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாகப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.