அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில், தலித் தொழிலாளி ஒருவரை, தூணில் கட்டி வைத்து மிகக் கொடூரமான முறையில் அடித்தே கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த தொழிலாளி முகேஷ் சாவ்ஜி வானியா (40). இவர் அங்குள்ள ஷாபார்- வேராவல் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை தொழிற்சாலைக்கு வந்த அவரை தொழிற்சாலை கேட்டில் கட்டி வைத்து, கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். 5 பேர் தங்களின் பேண்ட் பெல்ட்டை கழற்றி 5 சரமாரியாக அடித்துள்ளார்.வானியாவை திருடன் என்று நினைத்துக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. ஆனால் இவற்றை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை.வானியாவின் மனைவி உள்பட இரண்டு பெண்கள், தாக்குதலை தடுத்தபோதும் விடாமல் அந்த 5 பேரும் தாக்கியுள்ளனர். வானியா மீதான தாக்குதலை தடுத்தபோது, பெண்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அவர்கள், காவல்துறையினரை அழைத்துக்கொண்டு வந்து, வெறிக்கும்பலிடமிருந்து வானியாவை மீட்டுள்ளனர். எனினும், ராஜ்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வானியா உயிரிழந்தார்.இதையடுத்து, வானியா கொல்லப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், 2 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே வானியாவின் உடலை பெறுவோம் என்று உறவினர்கள் தெரிவித்ததால், இது ராஜ்கோட் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தலித் தொழிலாளி முகேஷ் வானியா ஆலை முதலாளியால் அடித்துக் கொல்லப்பட்ட வீடியோ காட்சிப் பதிவும் சமூகவலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.இளம் தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி எம்எல்ஏ-வும் கண்டனம் தெரிவித்துள்ளார். தலித் சமூகத்தைச் சேர்ந்த முகேஷ் வானியாவையும், அவரது மனைவியும் தொழிற்சாலை உரிமையாளர்களால் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.இதனிடையே, தொழிற்சாலையில் திருட முயன்றதாலேயே முகேஷ் வானியாவை அடித்துக் கொன்றதாக வதந்தியை கிளப்பிவிடத் துவங்கியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.