தீக்கதிர்

கிருஷ்ணகிரி: நீரில் மூழ்கி 2 சிறுவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே அணையில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி அருகே கே.ஆர்.பி. அணையில் கருத்தப்பநகரைச் சேர்ந்த அண்ணன் தமிழரசன் (8), தங்கை நந்தினி (4) ஆகியோர் குளிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.