புதுதில்லி:
உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் குறித்த ஆய்வை ‘ஏஎப்ஆர் ஆசிய வங்கி’ நடத்தியிருக்கிறது. தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், இந்தியா 6-ஆவது இடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.‘ஏஎப்ஆர் ஆசிய வங்கி’ மேற்கொண்ட ஆய்வில், 62 ஆயிரத்து 584 பில்லியன் டாலர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 24 ஆயிரத்து 803 பில்லியன் டாலர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 19 ஆயிரத்து 522 பில்லியன் டாலர்களுடன் ஜப்பான் மூன்றாவது இடத்திலும் வந்திருக்கின்றன. அதேபோல, இங்கிலாந்து 9 ஆயிரத்து 919 பில்லியன் டாலர்களுடன் நான்காவது இடத்தையும், ஜெர்மனி 9 ஆயிரத்து 660 பில்லியன் டாலர்களுடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்து இருக்கின்றனர்.

இந்த நாடுகளுக்கு அடுத்த இடத்தை 8 ஆயிரத்து 230 பில்லியன் டாலர்களுடன் இந்தியா பெற்றுள்ளது.இந்தியாவுக்கு அடுத்ததாக, கனடா (6 ஆயிரத்து 393 பில்லியன் டாலர்கள்), ஆஸ்திரேலியா (6 ஆயிரத்து 142 பில்லியன் டாலர்கள்), பிரான்ஸ் (6 ஆயிரத்து 649 பில்லியன் டாலர்கள்), இத்தாலி (4 ஆயிரத்து 276 பில்லியன் டாலர்கள்) உள்ளன.கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் சொத்து மதிப்பு 200 சதவிகிதம் வளர்ச்சியடைந்து உள்ளதாகவும், அதிக எண்ணிக்கையிலான தொழில் முதலீட்டாளர்கள், சிறந்த கல்விமுறை, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, மருத்துவத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் வளர்ச்சி ஆகியவையே இந்த சொத்து மதிப்பு அதிகரிப்புக்கு காரணம் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: