தீக்கதிர்

அரியானாவில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தந்தை!!

சண்டிகர் :

கடந்த 6 மாதங்களாக தனது 12 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து வந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியானா மாநிலம் குருகிராம்மின் படாவுடி என்ற கிராமத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் போகே ராம் என்பவர் தனது இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 12 வயதாகும் தனது முதல் மனைவியின் மகளை தான் வேலை பார்த்து வந்த தொழிற்சாலையில் வைத்து கடந்த 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும், அக்குழந்தையையும் இதை வெளியே கூறக்கூடாதென்று குழந்தையை மிரட்டியிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.