திருப்பூர்,
திருப்பூர் செட்டிபாளையத்தில் கட்டப்பட்டு வரும் பாலாப் பணிகள் மந்தமான நிலையில நடைபெற்று வருகிறது.

திருமுருகன்பூண்டியிலிருந்து செட்டிபாளையம் செல்லும் வழியில் கட்டப்பட்டு வரும் பால பணிகள் பல ஆண்டுகளாக மந்தமான நிலையில் நடைபெற்றுகிறது. இந்த பகுதி அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைக்கு செல்லும் தொழிலாளர் சென்று வர கடுமையான பாதிப்பிற்குள்ளாகின்றனர். மேலும், இந்த பகுதியில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதியாகும். மேலும் இரவு நேரங்களில் அதிகமான போக்குவரத்து உள்ளதால் விபத்தும் ஏற்படுகின்றன. எனவே, மந்தமாக பல ஆண்டுகளாக நடைபெறும் பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.