தூத்துக்குடி,
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 3 ஆவது யூனிட்டில் சனிக்கிழமையன்று திடீரென கொதிகலன் பழுது ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் சுமார் 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அடிக்கடி ஏற்படும் பழுதால் முழு மின் உற்பத்தியை எட்டாத நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமையன்று 3-ஆவது யூனிட்டில் உள்ள கொதிகலனில் திடீரென பழுது ஏற்பட்டதால் அந்த யூனிட்டின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. இதனால், 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற நான்கு யூனிட்டுகளிலும் வழக்கம்போல தொடர்ந்து மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது என்றும், 3-ஆவது யூனிட்டில் ஏற்பட்ட பழுது விரைவில் சரி செய்யப்படும் என்றும் அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: