தீக்கதிர்

தாந்தேவாடாவில் கண்ணிவெடி தாக்குதலில் 6 வீரர்கள் பலி

ராய்ப்பூர்,
சத்தீஷ்கர் மாநிலம் தாந்தேவாடாவில் ஞாயிறன்று நிகழ்ந்த கண்ணி வெடி தாக்குதலில் 6 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர்.

தாந்தேவாடாவின் சோல்நார் கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடிகுண்டு வெடித்ததில் சிக்கிக்கொண் டது. இந்த சம்பவத்தில் மாநில சிறப்பு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 6 வீரர்கள் உயிரிழந்தனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளி யாகியுள்ளன. இரண்டு வீரர்கள் ஆபத்தான நிலையில் ஹெலிகாப்டர் மூலம் ராய்ப்பூர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப் பட்டனர். பாதுகாப்புப் படையினரின் ஆயுதங்களை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பறித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அப்பகுதியில் தீவிரவாதிகளை தேடும் வேட்டையும் நடக்கிறது.