புதுதில்லி,
மோசடிப் பேர் வழியும், மோடியின் நண்பருமான வைர வியாபாரி நீரவ் மோடி சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் லண்டனில் பதுங்கி உள்ளார் என அமலாக்கப்பிரிவு தகவல் தெரிவித்து உள்ளது.

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தனர். இருவரும் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர். வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ,அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மோசடி தொடர்பான விசாரணை தொடங்கியதுமே விசாரணைக்கு ஆஜராக சம்மன் விடுக்கப்பட்டது. ஆனால் இருவர் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப் பட்டது. இதற்கிடையே அவரை கைது செய்ய இன்டர்போல் உதவியை அமலாக்கப்பிரிவு நாடியது. நீரவ் மோடி முதலில் அமெரிக்காவில் இருக்கிறார் என கூறப்பட்டது, ஆனால் அதற்கு மறுப்பும் எழுந்தது.

இதற்கிடையே பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய நீரவ் மோடியை கைது செய்யுமாறு ஹாங்காங்கிற்கு இந்தியா கோரிக்கை விடுத்தது. உள்ளூர் சட்டம் மற்றும் நீதித்துறை உதவி ஒப்பந்தங்கள் அடிப்படையில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஹாங்காங் நடவடிக்கையை எடுக்க முடியும் என சீனாவும் கூறியது. இதுவரையில் நீரவ் மோடி எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் உள்ளது.இந்நிலையில் சிங்கப்பூர் பாஸ்போர்ட் டில் நீரவ் மோடி லண்டனில் உள்ளார் என அமலாக்கப்பிரிவு தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருடைய சகோதரர்பெல்ஜியம் பாஸ்போர்ட்டில் உள்ளார் எனவும், அவருடைய சகோதரி புர்வி மேத்தா பெல்ஜியம் பாஸ்போர்ட்டில் உள்ளார் எனவும், இப்போது ஹாங்கா ங்கில் உள்ளார் எனவும் தகவல்கள் தெரிவித்து உள்ளன. புர்வியின் கணவர் மாயாங் மேத்தா பிரிட்டன் பாஸ்போர்ட்டை பெற்று உள்ளார் எனவும் இப்போது ஹாங்காங் அல்லது நியூயார்க்கில் உள்ளார் எனவும் தக வல்கள் தெரிவித்து உள்ளது.

நீரவ் மோடியின் தந்தை தீபக் மோடி, சகோதரி புர்வி மேத்தா மற்றும் அவருடைய கணவர் மயாங் மேத்தா ஆகியோருக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. அவர்களுக்கு நிபந்தனையுடன் சம்மன் கள் இ-மெயில்கள் வாயிலாக அனுப்பப்பட்டு உள்ளது எனவும் அமலாக்கப்பிரிவு தகவல்கள் தெரி வித்து உள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டு உள்ளது. அண்மையில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் மீது சி.பி.ஐ. தனித்தனியாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. தற்போது இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. சர்வதேச போலீசான ‘இன்டர்போல்’ உதவியை நாட இருக்கிறது. தேடப்பட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து ஒப்படைக்கும் விதத்தில் ‘ரெட்கார்னர் நோட்டீஸ்’ வெளியிடும்படி இன்டர் போலை விரைவில் கேட்டுக் கொள் வோம் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.