திருப்பூர்,
திருப்பூரில் சாலையோரத்தில் கிடக்கும் குப்பைகள் எரிக்கபடுவதால் வாகன ஓட்டிகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில், குறிப்பாக பேப்ரிகேசன் சாலை ஓரத்தில் பலரும் வீட்டு குப்பைகள் கொட்டும் பகுதியாக மாற்றி வருகின்றனர். இதில் பாலித்தீன் பைகள், கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள், பயன்படுத்தப்பட்ட காலணிகள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகள் மூட்டை மூட்டையாக வீசி செல்கின்றனர்.

இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சாலையோரம் வீசப்படும் குப்பைகளுக்கு சிலர் தீ வைப்பதால், வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு அவதிக்குள்ளாகி வருகின்றனர். தீயிலிருந்து வெளியேறும் புகையால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், குடியிருப்புகள் மற்றும் பனியன் நிறுவனங்களும் இருப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், சுற்றுச்சூழலும் வெகுவாக மாசுபட்டு வருகிறது. இதனால் சாலைகளில், குப்பைகளை கொட்டவோ, தீ வைத்து எரிக்கவோ கூடாது என அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும். குப்பைகளை கொட்டி, தீ வைப்பவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: