பெங்களூரு:
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக வந்துவிட்டோம் என்று பாஜக கூறினாலும், அந்த கட்சி பெற்ற மொத்த வாக்குகள் காங்கிரசை விட குறைவாகும்.

தனிப்பெரும் கட்சி என்று கூறும் பாஜக, கர்நாடகத் தேர்தலில் பெற்ற வாக்குகள் 1 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 384. ஆனால், 78 இடங்களில் வென்ற காங்கிரஸ் பெற்றதோ 1 கோடியே 38 லட்சத்து 24 ஆயிரத்து 05 வாக்குகள். இதுஒருபுறமிருக்க, 29 தொகுதிகளில் பாஜக டெபாசிட்டை பறிகொடுத்தும், பாஜக ‘சாதனை’ படைத்துள்ளது. தற்போது, 5 தொகுதிகளில் நோட்டா வாக்குகள் பாஜக தோற்றுப்போனது தெரியவந்துள்ளது.மஸ்கி தொகுதியில் பாஜக 213 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளது. ஆனால், இங்கு நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள் மட்டும் 2049. இதேபோலவே ஹைரேகிரூர் தொகுதியில் காங்கிரசுக்கும் பாஜக-வுக்குமான வாக்கு வித்தியாசம் 555. நோட்டா பெற்றதோ 972. குண்ட்கோல் தொகுதியில் பாஜக தோல்விக்கான வித்தியாசம் 634. நோட்டா பெற்றது 1032. சித்தராமையா வெற்றிபெற்ற பதாமி தொகுதியில் பாஜக-வின் தோல்வி வித்தியாசம் 1696 வாக்குகள் மட்டும்தான். ஆனால், இங்கு நோட்டா பெற்றது 2007. கடாக் தொகுதியில் பாஜக 1868 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்க நோட்டா 2007 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதேபோல பாஜக-விடம் காங்கிரஸ் தோற்ற 3 தொகுதிகளில் வாக்கு வித்தியாசமானது நோட்டா பெற்ற வாக்குகளை விட குறைவாகும். மதச்சார்பற்ற ஜனதாதளம் தோற்ற தொகுதி ஒன்றிலும், நோட்டா பெற்ற வாக்குகளை விட தோல்விக்கான வாக்குகள் குறைவாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.