புதுதில்லி:
அண்மையில் தலையெடுத்த பணத் தட்டுப்பாடு சீராகி விட்டதாகவும், ஏடிஎம்-கள் அனைத்தும் முறையாகச் செயல்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய பொருளாதார விவகாரங்கள் துறைக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் இதுதொடர்பாக தில்லியில் வெள்ளியன்று பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “நாட்டில் தற்போது போதுமான பணப்புழக்கம் உள்ளது; பணப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை; கடந்த சில நாட்களாகவே பணப்புழக்கம் அதிகரித்து வருவதை நாங்கள் பார்த்து வருகிறோம்; மூன்று நான்கு நாட்களில் மட்டும் ரூ. 40 ஆயிரம் கோடிக்கும் மேலாக டெபாசிட்கள் வந்து குவிந்துள்ளன; மேலும், நாட்டிலுள்ள ஏடிஎம்-கள் அனைத்தும் எவ்விதக் குறைபாடுமின்றிச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன; அரசின் நிதிப் பற்றாக்குறையும் கட்டுக்குள் உள்ளது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.