இன்று தோழர் ஹோ-சி-மின் அவர்களின் பிறந்த நாள்..

ஆசியாவில் உள்ள சின்னஞ்சிறு நாடுகளில் ஒன்றான வியட்நாமின் மக்கள் தலைவர்.

மெலிந்த தேகம் உள்ள அவரைப் பார்த்து அமெரிக்க ஏகாதிபத்யம் நடுநடுங்கியது…

அவர் சீனத்தின் மாபெரும் தலைவர் சூ-என்-லாயைப் போல பிரெஞ்ச் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்..

அவர் கப்பலில் சாப்பாட்டுத் தட்டுகள் கழுவுதல் முதலாக சர்வர் வேலை ஈறாக சிறுசிறு வேலைகளைப் பார்த்துக் கொண்டே வியட்நாமின் விடுதலைக்காக பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தையும் அமெரிக்க ஏகாதிபத்தையும் எதிர்த்து வியட்நாம் மக்களை வீரப்போர் நிகழ்த்த வைத்தவர்…

இன்றளவும் அவரை கொரில்லா யுத்தத்தின் தந்தை என்று உலகம் போற்றுகிறது..

உலக மகாயுத்தத்தில் பயன்படுத்தப்பட்டதை விட நாபாம் போன்ற கொடுமையான ரசாயன குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்கி தன்னை மனிதகுல விரோதி என்று மெய்பித்தது…

(குண்டு வீச்சைக் கண்டு அஞ்சி நிர்வாணமாக கதறிக் கொண்டு ஓடி வரும் ஒரு சிறுமியின் புகைப்படம் தான் இன்றளவும் உலகின் மிகச் சிறந்த புகைப்படமாக கருதப்படுகிறது)

ஒவ்வொரு அமெரிக்கனும் வியட்நாமில் ராணுவ சேவை செய்ய வேண்டுமென்ற உத்தரவை எதிர்த்து தான் குத்துச் சண்டை வீரர் காஷியஸ் கிளே என்கிற முகமது அலி அமெரிக்க அரசை எதிர்த்து வியட்நாம் ஆதரவு பிரச்சாரம் செய்து கடும் அடக்குமுறையை எதிர்கொண்டார்…

அமெரிக்காவில் இருந்து வியட்நாம் யுத்தத்திற்குப் போனவர்கள் மூடிய சவப்பெட்டிகளில் செத்த சவங்களாகத் தான் திரும்பினார்கள்…

வியட்நாம் யுத்தத்திற்குப் போனால் மரணம் நிச்சயம் என்று அஞ்சிய நடுங்கிய அமெரிக்க சிப்பாய்களுக்கு ஏற்பட்ட. மனப்பிறழ்வை மருத்துவ உலகம்”VIETNAM SYNDROME’ என்று பெயரிட்டு புதிய நோய்களின் பட்டியலில் சேர்த்துக் கொண்டது..

“VIETNAM SYNDROME” என்ற நோயினால் பாதிக்கப்பட்டு மரணகிலிக்கு உள்ளினவர்களை மருத்துவர்களால் குணப்படுத்த முடியாததால் மரணம் தலையிட்டு அவ.ர்களை நோயில் இருந்து விடுவித்தது..

வியட்நாமில் அமெரிக்கா நடத்திய அழிவு யுத்தத்தை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் பெண்கள் முன்னெப்போதும் இல்லாத. அளவு சவப்பெட்டிகளோடு யுத்த எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தினார்கள்…

அமெரிக்காவை வியட்நாமில் மட்டுமே யுத்தம் நடத்த அனுமதிப்பதால் தான் இவ்வளவு பெரிய அழிவு யுத்தத்தை நடத்த முடிகிறது என்று நினைத்த சேகுவாரா பிடல்காஸ்டிரோவின் சம்மதத்தோடு “இன்னும் பல வியட்நாம்களை உருவாக்கினால் தான் அமெரிக்காவை வியட்நாமை தினமும் குண்டு மழையினால் துளைத்துப் பொத்தலாக்குவதைத் தடுக்க முடியும் “என்று சொல்லி பொலிவியா போய் அரசுப்படைகளினால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்…

கடைசியில் வெல்லப்பட முடியாத என்று கர்வத்தோடு இருந்த அமெரிக்க ஏகாதிபத்யம் “தான் வெறும் காகிதப் புலி தான்” என்ற நிரூபிக்கப்பட்ட அவமானத்தோடு வியட்நாமில் ஹோசிமின்னின் முன்பு முழந்தாள் படியிட்டு மண்டியிட்டு விட்டு வியட்நாமில் இருந்து ஓடி வந்து விட்டது..

ஒரு அணு ஆயுத அசுரனை மண்டியிட்டு நடுங்க வைத்த ஒரு சிறு விவசாய நாட்டின் மக்கள் தலைவரான ஹோசிமின்னை “அபார ஆற்றல் படைத்த மாயாவி” என்று அமெரிக்க ஜனாதிபதிகள் நிஜமாகவே நம்பினார்கள்.

வியட்நாம் யுத்தத்தோடு ஒப்பிட்டால் ஆப்கனிலும் ஈராக்கிலும் சிரியாவிலும் நடந்த யுத்தங்கள் “வெறும் வரப்புத் தகராறுகள்”தான்..

சர்வதேச த் தலைவராக அங்கீகரிக்கப்பட்ட ஹோசிமின் உலக இலக்கியங்களையும் மார்க்சிய இலக்கியங்களையும் கரைத்துக் குடித்தவர்.போர் நடத்துவதில் நிகரற்ற கமாண்டர்.மக்கள் நல்வாழ்விற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சரித்திர நாயகன்..மக்களைப் போலவே எளிமையாக உடுத்தினார்.சாதாரண மனிதர்களைப் போலவே சாதாரணமாகவே வாழ்ந்தார்…எதிரிகளாலும் மாபெரும் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹோசிமின்னோடு ஒப்பிடக் கூட அருகதையில்லாத நபர்கள் ஆட்சி நடத்தும் போது வாழ்கிறோம் என்ற மனத்தாங்கலோடு மாபெரும் புரட்சியாளனுக்கு நம் செவ்வணக்கத்தை சமர்பித்துக் கொள்கிறோம்…

Gnanabharathi Chinnasamy

Leave a Reply

You must be logged in to post a comment.