நேபாளத்தில் பிரதானமாக இரு கம்யூனிஸ்ட் கட்சிகள்.,

1)நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(யூ.எம்.எல்),
2)நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்டு மையம்). இவ்விரு கட்சிகளும் நேபாள மன்னராட்சி முறைக்கு எதிராக நீண்ட நெடிய போராட்டம்-ஆயுதம் ஏந்தி போர் உள்ளிட்டு-நடத்தினர். மன்னராட்சி முடிந்தது. குடியாட்சி மலர்ந்தது.அதற்கான அரசியலமைப்பு சட்டத்தையும் உருவாக்கி,”நேபாள குடியரசு”-the Republic of Nepal என பிரகடனம் செய்து விட்டனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற, மாகாண மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தனர். நேபாள புதிய அரசியல் அமைப்பு சட்டப்படி அமைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் மொத்தம்- 275 எம்.பி-கள். இதில் 165 இடங்களுக்கு நேரடியாக தேர்தல்(நம்ம ஊரு மாதிரி). மீதமுள்ள 110-இடங்களுக்கு விகிதாசார பிரதிநித்துவ தேர்தல் முறை. இதில் முன்னதில் 113- சீட்டுகளும்,பின்னதில் 61-சீட்டுகளுமாக மொத்தம் உள்ள 275-ல் 174- இடங்களை இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கைப்பற்றி கூட்டணி ஆட்சி அமைத்தனர். இந்த பின்னணியில் தான் இணைப்பு ஏற்பாடுகள் துவங்கியது.

இந்த பணிகள் ஊடே இரு கட்சிளையும் இணைத்து ஒரே கம்யூனிஸ்ட் கட்சியாக ஆக்குவது எனவும் தீர்மானித்தனர். அதற்கான “கட்சி இணைப்பு-ஒருங்கிணைப்பு குழு”-அமைத்தனர். கடந்த எட்டு மாதங்களாக இணைப்புக்கான பணிகளை இந்த குழு மேற்கொண்டது.

அதன் அடிப்படையில் இரு கட்சிகளும் இணைந்து
#நேபாள_கம்யூனிஸ்ட்_கட்சி“-என்ற பெயரில் புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக உருவாக்கி விட்டனர். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணியையும் துவங்கி விட்டனர். கட்சி பொறுப்புகளை(பதவி என்ற சொல்லை தவிர்க்க) 55:45 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். மத்திய குழு(Central Committee), நிலைக்குழு(Standing Committee), ஒரு மத்திய வாரியம்(Central Board) என மூன்றடுக்கு மத்திய அமைப்பு நிலை ஏற்பாடு. தோழர்கள் ஹத்கா பிரசாத் சர்மா ஒலி(Khadga Prasad SharmaOli-CPN-UML-சேர்ந்தவர்.இவர் தான் தற்போதைய பிரதமர்)யும், புஸ்பே கமல் தாஹெல்-Pushpe Kamal Dahel-CPN-Maoist Center)-லும் கூட்டு தலைமையமாக- Co-Chairmen (Co-Chairperson) -ஆக செயல் படுவார்கள்.(அடுத்து இலங்கை இடதுசாரி இயக்கம் குறித்து பேசலாம்.அங்கே மேதின விழாவிற்கு சென்ற தோழர் ஏ.சவுந்தரராஜனை பேட்டி கண்டால், அவ்வளவு விபரம் வைத்துள்ளார்)

Karumalaiyan

Leave a Reply

You must be logged in to post a comment.