ஜெனீவா:
ஐ.நாவின் மனித உரிமை செயற்குழு மே 18ஆம் நாள் ஜெனீவாவில் அவசரக் கூட்டம் நடத்தி காசா நிலைமை பற்றி விவாதித்தது. இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட பாலஸ்தீன உரிமைப் பிரதேசம் குறிப்பாக காசா பிரதேசத்தில் நிகழ்ந்து வரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து புலனாய்வு செய்யும் வகையில் சிறப்புக் குழு ஒன்றை அனுப்புவதென்ற தீர்மானம் இக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.மார்ச் 30ஆம் நாள் காசா பிரதேசத்தில் இஸ்ரேலின் ஊடுருவலுக்கு எதிராக பெருமளவிலான ஆர்ப்பாட்டம் துவங்கியது முதல் இதுவரை 12 குழந்தைகள் உட்பட 87 பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேல் படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 29 பாலஸ்தீன மக்கள் வேறு இடங்களில் உயிரிழந்துள்ளனர். குறைந்தது 12 ஆயிரம் மக்கள் காயமுற்றுள்ளதாக மனித உரிமை விவகாரத்துக்குப் பொறுப்பான ஐ.நாவின் உயர் அதிகாரி சயீத் ஹுசைன் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

அதே நாள், பாலஸ்தீன இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்தின் அரசியல் குழுத் தலைவர் இஸ்மாயில் ஹனியா காசாவில் அமைந்துள்ள ஒரு மசூதியில் உரை நிகழ்த்துகையில், காசா மீதான முற்றுகையை இஸ்ரேல் முற்றிலும் நீக்கும் வரை, பாலஸ்தீனத்தின் ஆர்ப்பாட்ட நடவடிக்கை முடிவுக்கு வராது என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.