புதுதில்லி:
கர்நாடகாவில் நம்பிக் கை வாக்கெடுப்புக்கு முன்னதாகவே எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா பதவி விலக வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கர்நாடக ஆளுநருக்கு வெட்கமிருந்தால், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி சாடியுள்ளார். “பாஜகவின் ஊழல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் தோல்வியைத் தழுவி யுள்ளது. அக்கட்சியை ஆட்சியமைக்குமாறு அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவு வஞ்சகமானது, அரசி யலமைப்புக்கு எதிரானது” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.ஸ்டாலின்
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், உச்சநீதி மன்றத்தின் மூலமாக அர
சியல் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. கர்நாடகா வில் ஆட்சி அமைக்கவுள்ள காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் அணிக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். “பாஜகவில் அல்ல,
இந்திய அரசியலில் அறநெறி நீடித்திருப்பது கர்நாடகாவில் தெரிய வந்துள்ளது. அம்மாநில ஆளுநர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாஜக முன்னாள் மத்திய அமைச் சர் யஷ்வந்த் சின்ஹா.

Leave A Reply

%d bloggers like this: