ஈரோடு,
தனியார் நிதி நிறுவனத்தில் வார தவணை முறையில் கடன் வாங்கிய விவசாயி கடனை திருப்பிக் கொடுக்காததால் ஆத்திரமடைந்த நிதி நிறுவன அதிபர் விவசாயி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சடையாம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள் – நந்தினி தம்பதியினர். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இத்தம்பதியினர் ஈரோடு சம்பத் நகரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவன அதிபரிடம் வார தவணை முறையில் திருப்பி செலுத்தும் வகையில் ரூ.15 ஆயிரம் பணத்தை கடனாக பெற்றுள்ளார். இதன்பின் ஒரு குறிப்பிட்ட தொகையை திரும்ப செலுத்திய நிலையில், குடும்ப சூழல் காரணமாக பணம் செலுத்த தாமதித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நிதி நிறுவனத்தினர் பெருமாளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அவரது மனைவியை தரக்குறைவாகவும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இந்நிலையில் வியாழனன்று மாலை பெருமாளை, நிதிநிறுவன அதிபர் குண்டு கட்டாக நிதி நிறுவன அலுவலகத்திற்கு தூக்கி சென்றுள்ளார்.

பின்னர் அங்கு வைத்து அவரை சராமரியாக தாக்கியதுடன் மிரட்டல் விடுத்துள்ளார்.இதனால் மனமுடைந்த பெருமாள் வீட்டிற்கு சென்றபின் சாணிப்பவுடரைக் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனை பார்த்த வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: