திருப்பூர்,
மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான கொலைவெறி தாக்குதலை ஏவி ஜனநாயகப் படுகொலை நிகழ்த்திய மம்தாவின் காட்டாட்சி தர்பாரைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் குமரன் சிலை முன்பாக வெள்ளியன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகர செயலாளர் பி.முருகேசன் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உண்ணிகிருஷ்ணன், டி.ஜெயபால், வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிசாமி, வேலம்பாளையம் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இந்த ஆர்ப்பாட்டட்த்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டு மம்தா அராஜக ஆட்சியைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.