இம்பால்:
மணிப்பூர் மாநிலம் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக ராமலிங்கம் சுதாகர் வெள்ளியன்று பொறுப்பேற்றார். மணிப்பூர் ஆளுநர் ஜெக்தீஷ் முகி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங், துணை முதலமைச் சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிமன்ற மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.நீதிபதி ராமலிங்கம் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் ஜம்மு – காஷ்மீர் மாநிலம் உயர்நீதிமன்ற நீதிபதி
யாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் உச்சநீதி மன்றம் கொலிஜீயம் ராமலிங்கத்தை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்தது.

Leave A Reply

%d bloggers like this: