===எஸ்.சங்கர்===
நமது நாடு விடுதலை அடைந்த பின்னர் பல்வேறு துறைகளில் பல்வேறு விதமான மாறுதல்களை அடைந்து வருகிறது. இருந்த போதும் நாடு தழுவிய அளவில் இன்னமும் 70 சதவீதத்திற்கு மேலான மக்கள் கிராம புறங்களில் தான் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் சுமார் 56 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்ந்து வருகிறார்கள். இந்திய நாட்டில் நகர் மயமாதலில் தமிழக 49 சதம் என்ற நிலையில் முதலிடத்தில் உள்ளது. பெரும்பான்மையான மக்கள் கிராமபுறத்திலும் மற்றும் நகர் புறத்திலும் வாழும் ஏழை மக்களின் வாழ்க்கை எப்படி உள்ளது?

நல்ல குடிநீரோ, சுகாதாரமான வாழ்வோ இருப்பதற்கு சொந்த இடமோ இல்லாத மக்கள் பெரும்பகுதி உள்ளனர். தமிழகத்தில் ஏராளமான அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் இருந்தும் ஏழைமக்களுக்கு வீட்டுமனை சொந்தமாக்கப்படவில்லை ஏறத்தாள 70 லட்சம் மக்களுக்கு தமிழகத்தில் சொந்த வீடற்றவர்களாக உள்ளனர்.

கிராம ஊராட்சிகளில் 1.சுடுகாடு மற்றும் இடுகாடு புறம்போக்கு 2.மேய்த்தறை புறம்போக்கு 3.தோப்புகள 4.வண்டிப்பாதை மற்றும் நிறுத்தும் இடம் 5.புறம்போக்கு மந்;தை வெளிபுறம்போக்கு 6. பல வகையான பாதைகள் – புறம்போக்கு 7.களம் 8.ஊரணி-குட்டை 9.ஓதுக்கப்படாத காடுகள் புறம்போக்கு என ஊராட்சிகளில் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட புறம்போக்குகளை பட்டா வழங்க ஆட்சேபனை இல்லை என ஊராட்சி தீர்மானம் நிறைவேற்றினால் எளிய மக்களுக்கு பட்டா கிடைத்துவிடும் ஆனால் தமிழக அரசு செய்ய தயாராக இல்லை.

பஞ்சமி நிலம்
நம்மை அடிமைப்படுத்த ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்கள், தலித் மக்களுக்கு நிலம் வழங்கிட 1891 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி 1892 முதல் 1933 வரை சுமார் மூன்றரை லட்சம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்திய சமுதாயத்தில் நிலவும் வருணாசிர தர்மத்தின் விளைவாக, அடக்கி ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்ட தலித் மக்கள் ஏன் என்று கேட்க முடியாது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்களை இதரர்கள் கைப்பற்றினர். வருவாய்த்துறை ஆவணங்களே வசதி படைத்தவர்களால் திருத்தப்பட்டன. உயர்நீதிமன்றம் தலையிட்டும் அந்நிலங்களை தலித் மக்களுக்கு வழங்கிட எவ்வித நடவடிக்கையும் இல்லை.
தமிழ்நாட்டின் நில நிர்வாக ஆணையர் அவர்களின் கணக்குப்படி சுமார் 1.26 லட்சம் ஏக்கர் தான் தற்போது உள்ளது. இதில் தற்போது 10 சதவீத நிலங்கள் தான் தலித் மக்களிடம் உள்ளது. மக்களுக்கு வழங்கப்படும் பஞ்சமி நிலத்தை தலித் அல்லாதவர்கள் வாங்கக் கூடாது என்ற விதி காற்றில பறக்கவிடப்பட்டது.வல்லான் வகுத்தது வாய்க்கால் என்ற முறையில் அரசு வேடிக்கை பார்க்கிறது.

சமூக நலத்திட்டம்
கிராம புற ஏழைகளுக்கு அரசின் சலுகைகளை பெற்றுத்தருவதற்க்காகவும், கிராமங்களில் நிலவும் வருமையில் ஓரளவு சற்று நிவாரணம் பெறுவதற்காக விவசாய தொழிலார்களுக்காக சமூக பாதுக்காப்பு சட்டம் தேவை என நமது சங்கம் தொடர்ச்சியாக போராடி வந்தோம். இதன் விலைவாக தி.மு.க அரசு 09.02.2001 ல் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் விவசாயிகள் (சமூக பாதுகாப்பு மற்றும் நலம்) திட்டம் கொண்டு வந்தது. 2001 ல் மே மாதம் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு முந்தைய திமுக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதாலயே இத்திட்டத்தை செயல்படுத்தாமல் 03.10.2015 ல் இத்திட்டத்தை ரத்து செய்து விட்டது. பின்பு இத்திட்டத்தின் பெயரை மாற்றி தமிழக முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம் என அ.தி.மு.க அரசு அறிவித்தது.

2006ல் திமுக ஆட்சிக்கு வந்த உடன் இத்திட்டத்தை சட்டமாக மாற்ற வேண்டும் என நமது சங்கம் போராடியது நமது கோரிக்கையை ஏற்று 22.12.2006 ல் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் – விவசாயிகள் (சமூக பாதுகாப்பு மற்றும் நலம்) சட்டம் என தி.மு.க அரசு அறிவித்தது 18.01.2007 ல் இதற்கான தனி நலவாரியம் அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் விவசாய தொழிலாளர்கள் – விவசாயிகள் என 1 கோடியே 67 லட்சத்து 4 ஆயிரத்து முன்னூற்று பதினான்கு பேர்களை உள்ளடக்கி குடும்ப தலைவர்கள் பெயரில் 7.4.2008 வரை 73.03.066 உறுப்பினர்களுக்கு உழவர் அட்டை வினியோகம் செய்யப்பட்டது.

தமிழக வரலாற்றில் விவசாய தொழிலாளர்கள் மற்றும் சிறு குறு விவசாயிகளுக்கான ஒரே சட்டம் இது தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதையும் 19.8.2011 ல் அ.தி.மு.க அரசு சட்டம் என்பதை மாற்றி தமிழ்நாடு முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம் என அறிவித்து தற்போது படு மோசமாக செயல்படுத்தி உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மக்கள் தொகைக்கு ஏற்ப உழவர் பாதுகாப்பு அட்டையை அச்சியிட்டு வினியோகம் செய்யவில்லை. இதனால் ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் சமூக நல பிரிவு அலுவலகத்தில் வயது முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

1. இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம்
2. இந்திரா காந்தி மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய தேசிய திட்டம்
3. இந்திரா காந்தி விதவைகள் ஓய்வூதிய தேசியத்திட்டம்
4. ஆதரவற்றோர் மாற்று திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம்
5. ஆதரவற்றோர் விதவைகள் ஓய்வூதிய திட்டம்
6. ஆதரவற்ற வேளாண் தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டம்
7. கணவரால் கைவிடப்பட்ட – ஆதரவற்ற பெண்கள ஓய்வ+தியத்திட்டம்
8. 50 வயது எய்தியும் வசதியில்லாததால் திருமணம் ஆகாமல்; இருக்கும் உழைக்கும் திறனற்ற ஏழை பெண்களுக்கான ஓய்வூதியத்திட்டம் என முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் செயல்பட்டு வந்தாலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக 30 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.

கிராம புற ஏழை மக்களுக்கு அரசின் சலுகைகளை ஆட்சியாளர்கள் பெற்று தர வேண்டும். இதில் இடைத்தரகர்கள் கமிஷன் பெற்றுக் கொண்டு அரசின் பண பயண்களை பெற்று தருவாத கூறி செயல்படுவோர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இத்திட்டத்தின் பலன்கள் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைப்பதை தமிழக அரசு உருதி செய்திட வேண்டும்.
கட்டுரையாளர்: விதொச மாநில செயலாளர்

Leave a Reply

You must be logged in to post a comment.