உடுமலை,
உடுமலையில் தொழிலாளா் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் எஸ்ஆா் கே என்ற இரு சக்கர வாகனங்கள் விற்பனை நிறுவனத்தின் மீது தொழிலாளா் நல அலுவலர் நடவடிக்கை எடுக்கக் கோரி வியாழனன்றுசிஐடியு பொது தொழிலாளா் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடுமலையில் எஸ். ஆர். கே நிறுவனத்தின் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு பொது தொழிலாளா் சங்கத்தின் தலைவர் வி. ரங்கநாதன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். ஜெகதீசன், போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் வி. விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கி. கனகராஜ், மாதா் சங்கத்தின் மாலினி மற்றும் சாமிதுரை, தெய்வக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளான தொழிலாளா்கள் கலந்து கொண்டு எஸ்ஆர்கே இரு சக்கர வாகனங்கள் விற்பனை நிறுவனத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: