தாராபுரம்,
கர்நாடக மாநிலத்தில் அதிக எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மை பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஜனநாயக படுக்கொலை செய்த கவர்னரை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகராட்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு தலைமை வகித்தார். மேலும், கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, கர்நாடக கவர்னர் ஜனநாயக படுகொலையில் ஈடுபடுகிறார் என்ற வாசங்கள் அடங்கிய மனுவை மகாத்மா காந்தி சிலையிடம் அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: