கோவை,
கைதிகளை துன்புறுத்துவது போன்ற அத்துமீறல்கள் கோவை மத்திய சிறையில் நடைபெறுவதாக கோவை மாவட்ட சட்டபணிகள் ஆணையக்குழு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கைதி ஒருவர் சிறையில் உள்ள காவலர்கள் கைதிகளை கடுமையான தாக்கி
வருகின்றனர். ஆகவே, தங்களை வேறு சிறைக்கு மாற்றுங்கள் என நீதிபதியிடம் புகார் அளித்ததுடன், நீதிமன்ற வளாகத்திலேயேசட்டையை கழற்றி காயங்களை காட்டி ஆவேசமாக முழக்கமிட்டனர். இதனைத்தொடர்ந்து மற்ற கைதிகளும் இவருடன் இணைந்து, கைதிகளுக்கு பாதுகாப்பில்லை என குரலெழுப்பினர். இந்நிலையில் சிறையில் பல்வேறு முறைகேடுகள், மனித உரிமை மீறல்கள் நடைபெறுவது உண்மைதான் என கோவை மாவட்ட சட்ட பணிகள் ஆணையக்குழு சார்பில் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்பணிகள் ஆணையக்குழுவின் உறுப்பினர் வழக்கறிஞர் கணேஷ்குமார் கூறுகையில், கோவை மத்திய சிறையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்து கொண்டிருந்தது. மாவட்ட நீதிபதியிடமும் இதுபோன்ற புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் சட்டப்பணிகள் ஆணையக் குழுவின் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் கோவை மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டேன். இதுகுறித்த அறிக்கையை மாவட்ட நீதிபதியிடம் அளித்துள்ளேன்.

இது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த அறிக்கையில் சிறையில் கண்டதை அப்படியே பதிவு செய்து அறிக்கையாக அனுப்பியுள்ளேன். குறிப்பாக நான் ஆய்வு செய்தவையில் பல்வேறுஅதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. முதலாவதாக கோவை மத்திய சிறையில் ஜெயிலர் மற்றும் ஏடிஎஸ்பி ஆகிய இரண்டு பணியிடங்களும் நிரப்படாமல் காலியாக உள்ளது. நான் ஆய்வுக்கு சென்றிருந்த இந்த காலத்தில் சௌந்திரராஜன் என்கிற கைதி கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்த தற்கொலை முயற்சிக்கு எங்கிருந்து ஆயுதம் கிடைத்தது என்பது விசாரணை மேற்கொண்டபோது எந்த உருப்படியான தகவலும் கிடைக்கப் பெறவில்லை.

இதேநேரத்தில் சிறையில் நடைபெறும் துன்புறுத்தல் காரணமாகத்தான் தற்கொலைக்கு முயற்சித்தார் என்று அங்கிருந்த சில கைதிகள் தெரிவித்தனர். சிட்டிபாபு என்கிற கைதி ஒருவர்நேரிடையாக என்னிடம் வந்துகைதிகள் கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்கப்படுவதாகவும், என்னை 36 முறை சீர்திருத்த சிறை என்கிற 9 எண் பிளாக்கில் வைத்து கடுமையாக தாக்கியதாக தெரிவித்தார். இதுபோன்று பல கைதிகளை ஆடைகளை களைந்து உள்ளாடை மட்டும் அணிய வைத்து கடுமையான தாக்குதல் நடத்தி நிர்வாணமாக கொசுக்கள் அதிகமுள்ள இந்த பிளாக்கில் அடைத்துசித்தரவதைக்கு ஆளாக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், கைதிகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளை மருத்து பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் நான் ஆய்வு செய்தஒரு மாதத்தில் எந்த மருத்துவபரிசோதனையும் செய்யப்படவில்லை. இதுகுறித்து பணியில் இருந்த மருத்துவரிடம் கேட்டால் அவர் உங்களுக்கு பதில் சொல்லமுடியாது அதிகார தோரணையோடு தெரிவிக்கிறார். சட்ட ஆணையத்தின் சார்பில் ஆய்வு செய்ய வந்த என்னிடமே இதுபோன்று அலட்சியமாக மருத்துவர் தெரிவிக்கின்றார் என்றால் யாரும் இல்லாத நேரத்தில் கைதிகளிடம் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பது உங்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன் என்றார்.

மேலும், மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் கைதிகளின் உடையில் எச் என்கிற குறியீடும், தொற்றுநோய் பாதித்த கைதிகளின் உடையில் சிறப்பு குறியீடும் பொருத்த வேண்டும் என்பது சிறைவிதி. ஆனால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் எந்த கைதியின் உடையிலும் இந்த குறியீட்டை காணவில்லை. இது கைதிகளின் உடல் நல பாதுகாப்பில் சிறை நிர்வாகத்தின் அலட்சியம் அப்பட்டமாக தெரியவருகிறது. இதேபோல கைதிகளின் முடிகளை வெட்டுவதற்கும், சவரம் செய்வதற்கும் பயன்படுத்தப்படும் கத்தரிக்கோல், பிளேடு போன்ற கருவிகள் பரிசோதனை செய்யப்படாமலேயே உபயோகப்படுத்தப்படுகிறது. இப்படி அடுக்கடுக்கான அத்துமீறல்கள் நடைபெறுகிறது என குற்றம் சாட்டினார். முன்னதாக ஏப்ரல் 30 ஆம்தேதி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த அறிக்கை சமர்ப்பித்துருப்பதாகவும், நீதிமன்றம் தலையிட்டு சிறையில் நடைபெறும் அத்துமீறல்களை தடுக்கும் என தாம் நம்புவதாக வழக்கறிஞர் கணேஷ்குமார் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.