புதுதில்லி,

குட்கா வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் குட்கா விற்பனை செய்ய சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா், காவல் துறை டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற தலைமைநீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார்.

சென்னை உயா்நீதிமன்ற அனுமதித்த சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை மீண்டும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரி சிவக்குமார் என்பவா் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது திமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பழகன் தரப்பில் குட்கா வழக்கில் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் விசாரணை நடைபெற உள்ளது. மேலும் ஆளும் கட்சியைச் சோ்ந்த அமைச்சா், காவல் துறை டிஜிபி ஆகியோர் மீது இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தினால் அதன் உண்மைத் தன்மை வெளிப்பட வாய்ப்பில்லை என்று வாதிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதிகள் தமிழக சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: