பெங்களூரு,
கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகத்தேர்தலில் பெரும்பான்மை பெறாத பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் வியாழன் அதிகாலை வரை இந்த வழக்கு விசாரணையை நடத்தியது. இறுதியில் எடியூரப்பா ஆட்சியமைக்க தடையில்லை என்று 3 நிதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. மேலும் எடியூரப்பா ஆளுநரிடம் வழங்கிய கடித நகலை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து நேற்று வெள்ளியன்று காலை எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றார், இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் ஆஜரான கபில் சிபில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தது தன்னிச்சையான முடிவு. யாரை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கும் நடைமுறைகளில் உள்ள மரபு பின்பற்றப்படவில்லை என்று அவர் வாதிட்டார்.
காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்எல்ஏக்களில் சிலர் கூட பாஜகவுக்கு ஆதரவளிப்பார்கள். தேவைப்படும் போது சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம். எடியூரப்பாவுக்கு போதுமான எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. எடியூரப்பா  தனது கடிதத்தில் ஆதரவு எம்எல்ஏக்கள் குறித்த பட்டியலை குறிப்பிடவில்லை. ஆட்சியமைக்க யாரை அழைக்க வேண்டும் என்பது ஆளுநரின் தனிப்பட்ட உரிமை என வாதாடினார்.

காங்கிரஸ், மஜத  பெரும்பான்மை இருக்கிறது என்று கூறிய நிலையில்  பாரதீய ஜனதாவை மட்டும் ஆட்சி அமைக்க அழைத்தது ஏன் என உச்சநீதிமன்ற நீதிபதி சிக்ரி கேள்வி எழுப்பினார். 104 இடங்கள் வென்ற எடியூரப்பா எதன் அடிப்படையில் ஆளுநரால் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பு  எடுக்க யாரை முதலில் அழைப்பது என்பதுதான் கேள்வி.

கர்நாடக பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிடலாமா? பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாரா? என நீதிபதி சிக்ரி கேள்வி எழுப்பினார்.

கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநரின் முடிவை ஆய்வு செய்வது அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு என 2 வழிகள் தான் உள்ளன. நம்பிக்கை வாக்கெடுப்பே சிறந்த முடிவாகும் என நீதிபதி அர்ஜன் குமார் சிக்ரி கூறினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்களுக்கே முதல் வாய்ப்பு வழங்க வேண்டும். நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார். நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். கால தாமதமின்றி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்.  எம்.எல்.ஏக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். என  காங்கிரஸ், மஜத கட்சிகள் சார்பாக வாதிடப்பட்டது.  அனைத்து எம்எல்ஏக்களும் சட்டப்பேரவைக்கு வந்து வாக்களிக்க பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

நாளை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கூடாது.  குமாரசாமி அளித்த கையெழுத்துகள் குறித்து எங்களுக்கு கேள்விகள் உள்ளது  என பாஜக வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி  கூறினார். அவரது வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் நாளை மாலை  நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பை உத்தரவிட்டு  உள்ளது. மேலும் தகுந்த பாதுகாப்பு வழங்க கர்நாடக டிஜிபிக்கு உத்தரவிட்டு உள்ளது.
மேலும் மூத்த உறுப்பினர் ஒருவரை தற்காலிக சபாநாயகராக நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.