மதுரை,
மதுரையில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை கே.கே.நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளையில் 2-வது மாடியில் இன்று காலை எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு அண்ணா நிலையம், அனுப்பானடி, தல்லாகுளம் பகுதியில் இருந்து 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. தீயை கட்டுப்படுத்த தனியார் வாகனங்களிலும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இந்த பணியில் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.
தீயை அணைக்கும் பணியின்போது பொதுமக்கள் 3பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்தால்  அந்த அலுவலகத்தில் இருந்த 45 கணினிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் கருகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்ற முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: