”எனது நாட்டை எப்படி ராகுல்காந்தி பாகிஸ்தானோடு ஒப்பிட முடியும்?” என கத்திக்கொண்டு இருக்கிறான் அர்னாப் ரிபப்ளிக் டிவியில்..

“பாகிஸ்தான் நீதித்துறை போலாகிவிட்டது இந்தியாவின் நீதித்துறையும்” என்று இன்று ராகுல்காந்தி சொல்லி விட்டாராம்.

இந்தியாவை அவமரியாதை செய்து விட்டார் என்று சங்கிகளும், ஊடகங்களும் காலையில் இருந்து கொதிக்கிறார்கள்.

பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகுதான், நீதித்துறையில் இலைமறை காயாக இருந்த அரசின் தலையீடு அப்பட்டமானது. உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளே வெளியே வந்து ஊடகங்களிடம் நீதித்துறையின் முறைகேடுகள் குறித்து பேசி வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. பாகிஸ்தானில் கூட இந்த வெட்கக் கேடு நடக்கவில்லை.

இதை குறிப்பிட்டுத்தான் ராகுல்காந்தி இந்திய நீதித்துறையை பாகிஸ்தானோடு ஒப்பிட்டுப் பேசினார்.

பாகிஸ்தான் நீதித்துறையை விமர்சிக்கும் பலரும், நீதிமன்ற விவகாரத்தில் இராணுவத்தின் தலையீடு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறவர்கள் நீதித்துறையில் தலையிடுகிறார்கள், அதன் மாண்பை சீர்குலைக்கிறார்கள் என்பது இரு நாடுகளிலும் பொதுவாகி இருக்கிறது.

இதை ராகுல் காந்தி சொன்னதில் என்ன தவறு?

பகிஸ்தானோடு ஒப்பிட்டு விட்டார். அதுதான் சங்கிகளுக்கு பற்றி எரிகிறது. பாகிஸ்தானை மொத்த இந்தியாவுக்கும் எதிரியாக்கி, அரசியல் செய்யும் அவர்கள் பிழைப்பில் தெரிந்தோ தெரியாமலோ இந்த ஒப்பீடு மூலம் ராகுல் காந்தி ஒரு பிடி மண்ணள்ளிப் போட்டு விட்டார். அதுதான் இந்த ஆத்திரம்.

ஆனால் காவிக்கும்பல் அதையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள தன் குரூர உத்திகளைக் கையாளுகிறது. கர்நாடகாவில் தாங்கள் இன்று செய்த ஜனநாயகப் படுகொலையை இந்த செய்தியின் மூலம் திசை திருப்ப முயற்சிக்கிறது.

மேலும் இதையே திரும்பத் திரும்பப் பேசி, தாங்கள் ஊதி வைத்திருக்கும் தேசீய வெறியுணர்வின் பேரில், ராகுல் காந்தியை இந்தியாவுக்கு எதிராக நிறுத்துவதற்கு இதனை ஒரு வாய்ப்பாக கருதுகிறார்கள். ஜவஹர்லால் யுனிவர்சிடியில் கன்னையாவுக்கு எதிராக அவர்கள் நடத்திய சூழ்ச்சி மிக்க பரப்புரையை நினைவில் கொள்வோமாக!

அட சங்கிகளே! வெறிகொண்ட அர்னாப்பே! இந்தியாவின் common man-யிடம் நமது நீதித்துறையின் லட்சணத்தை கேட்டுப்பாருங்கள். ’என் நாடு’ என்று கத்தும் உங்கள் முகத்திலேயே காறித் துப்புவார்கள்.

-Mathavaraj

Leave a Reply

You must be logged in to post a comment.