திருப்பூர்,
ஊத்துக்குளி தாலுகா புதுப்பாளையம் நியாயவிலைக் கடையில் அனைத்து கார்டுகளுக்கும் புழுங்கல் அரிசி வழங்கவும், அனைத்துப் பொருட்களையும் உரிய எடையளவு வழங்குவதுடன், வெளி மார்க்கெட்டுக்கு ரேசன் பொருட்கள் முறைகேடாக விற்பனை செய்வதைத் தடுக்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகிலஇந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஊத்துக்குளி தாலுகா புதுப்பாளையம் நியாயவிலைக் கடை முன்பு புதனன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரேசன் கோரிக்கையுடன், நூறு நாள் வேலை திட்டத்தில் கிராமத்தினருக்கு அட்டை வழங்கவும் வலியுறுத்தி் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்க கிளைத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் நந்தகுமார் முன்னிலையில், கோரிக்கைகளை விளக்கி விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சி.சுப்பிரமணியம் உரையாற்றினார். அத்துடன், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் ஆர்.மணியன், ஒன்றியச் செயலாளர் பிரகாஷ் உட்பட விவசாயத் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.