கொல்கத்தா:
உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல குற்றச்சாட்டுக்களை வைத்ததற்காக 6 மாதம் சிறைத்தண்டனை பெற்றவருமான முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் கொல்கத்தாவில் புதிய கட்சி ஒன்றைத் துவங்கியுள்ளார்.

நாட்டிலிருந்து ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதே, தனது கட்சியின் நோக்கம் என்று கூறியுள்ள கர்ணன், இந்த புதிய கட்சியின் சார்பில், வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தலித்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், தலித்துக்களை சிறுபான்மையினரை அனைத்து மாநில அரசும் மத்திய அரசும் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: