புதுதில்லி:
காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் திருத்தப் பட்ட காவிரி வரைவு திட்டத்தை வியாழனன்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்று பெயரிட்டுள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக வியாழனன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. புதனன்று நடைபெற்ற விசாரணையின் போது காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க ஆட்சேபணை தெரிவிக்காத மத்திய அரசு, வியாழனன்று தாக்கல் செய்துள்ள திருத்தப்பட்ட காவிரி வரைவு திட்டத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என பெயரை மாற்றியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இதற்கு தமிழக அரசின் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.இதனை இறுதித் தீர்ப்பின் போது கவனத்தில் கொள்வ தாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளதாகவும், எனவே, தமிழகத்தின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் என்று நம்புவதாகவும் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறி னார். காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் தலைமை அலுவலகத்தை தில்லிக்கு மாற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, பெங்களூருவுக்கு பதில் தில்லியில் தலைமையகத்தை மாற்றி அமைத்து வரைவு திட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.