தந்தையின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்ட திருநெல்வேலி மாணவர் தினேஷ் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் 85 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த மாணவர் தினேஷ். 12ம் வகுப்பு முடித்து விட்டு நீட் தேர்வு எழுத தயார் செய்து வந்தார். இந்நிலையில் தனது தந்தையின் தொடர் குடிப்பழக்கம் அவருக்கு மிகுந்த மனவுளைச்சலை ஏற்படுத்தியது. அதனால் விரக்தியில் கடந்த மே 2 அன்று காலை ரயில்வே மேம்பாலத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரது தற்கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் அவர் தனது தந்தைக்கும் முதல்வருக்கும் பிரதமருக்கும் எழுதி வைத்து சென்ற தற்கொலை கடிதம். அதில் தனது இறப்பிற்கு பிறகாவது குடிக்காமால் இருங்கள் என தனது தந்தைக்கு வலியுறுத்தி தனது இறுதி சடங்குகள் எதையும் அவர் செய்யக் கூடாது என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில் தினேஷ் சிறந்த மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அவர் எடுத்துள்ள மதிப்பெண்கள் சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் பரவிவருகின்றது.

ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் 85 சதவீத மதிப்பெண்களுடன் அவர் எடுத்துள்ள மதிப்பெண் விபரம்:

தமிழ் – 194

ஆங்கிலம் – 148

இயற்பியல் – 186

வேதியியல் – 173

உயிரியல் – 129

கணிதம் – 194

மொத்தம் – 1024

Leave a Reply

You must be logged in to post a comment.