திருப்பூர்,
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் திருப்பூர் தெற்கு பகுதி மாநாடு காங்கயம் சாலை சிடிசி பகுதியில் உள்ள சிராஜ் திருமண மண்டபத்தில் புதனன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு செளந்திரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் இப்ராஹிம்ஷா வரவேற்றார். மாவட்ட பொருளாளர் நாசர்அலி, சகிலா, மினி, லிங்க்ஸ் சவுகத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பி.மாரிமுத்து துவக்கிவைத்து பேசினார். சிஎஸை சர்ச் ஆயர் சுகுமார், பாஸ்டர் பிரேம் குமார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபு சலீம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

மாவட்ட தலைவர் நிசார் அகமது நிறைவுரையாற்றினர். இதில் தலைவராக பாஸ்டர் பிரேம் குமார், செயலாளராக செளந்திரபாண்டியன், பொருளாளராக இப்ராஹிம்ஷா உள்ளிட்ட 19 பேர் கமிட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.