சென்னை:
ஏடன் வளைகுடா பகுதியில் உருவாகியுள்ள சாகர் என்ற புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தென்மேற்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில், ஏடன் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாகத் தெரிவித்தார். சாகர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் கிழக்கு திசையில் ஏமன் நோக்கி செல்லக்கூடும் என்பதால் தென் மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

Leave a Reply

You must be logged in to post a comment.