கோவை,
கோவையில் காவலர் அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வியாழனன்று திறந்து வைத்தார்.

கோவை ரயில் நிலையம் அருகே ஹாமில்டன் கிளப்பை புதுப்பித்து தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகமாக உருவாக்கப்பட்டுள்ளது. 144 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட ஹாமில்டன் கிளப் அதிகாரிகளின் மனமகிழ் மன்றமாகவும், விடுதலை இந்தியாவில் காவலர் ஓய்வு விடுதியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த கட்டிடத்தை புதுப்பித்து காவலர் அருங்காட்சியம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இக்கட்டிடத்தின் பழமை மாறாமல் ரூ.60 லட்சம் மதிப்பில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் வியாழனன்று இந்த அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஊரக தொழிற்துறை மற்றும் சிறப்பு அமலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் தமிழக காவல்துறை இயக்கு
நர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அருங்காட்சியத்தை பார்வையிட்டனர்.

காவல்துறை கெடுபிடி:
முன்னதாக, காவலர் அருங்காட்சியகத்தை திறந்து வைக்க முதல்வர் வருவதையொட்டி அவரை வரவேற்க காலை 8 மணிக்கே குழந்தைகள் மற்றும் வயதான பெண்களை அதிமுகவினர் அழைத்து வந்திருந்தனர். ஆனால், முதல்வர் வர தாமதமானதால் வெயிலின் தாக்கம் அதிகமாகி பெண்கள் பலர் மயங்கி விழுந்தனர். இதேபோல் ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள அனைத்து கடைகளையும் அதிகாலை முதலே அடைக்க காவல்துறையினர் உத்தரவிட்டனர். இதனால் ரயில் பயணிகள் உண்ண உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க இயலாமல் அவதிக்குள்ளாகினர். மேலும், இவ்வழியாக வருகிற அனைத்து பேருந்துகளும் திருப்பிவிடப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.