நடப்புச் சாம்பியன் ஜெர்மனி,முன்னாள் சாம்பியன் பிரேசில், ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு தங்களது அணிகளை ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில்,தற்போது இங்கிலாந்து தனது அணி வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது.உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஒவ்வொரு நாடும் தத்தமது அணி வீரர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட கடைசி நாள் ஜூன் 4 ஆகும். ஜெர்மனி,அர்ஜென்டினா,பெரு,குரோசிஷியா,எகிப்து, தென்கொரியா,ஈரான் ஆகிய நாடுகள் தங்களது உத்தேச அணியை மட்டுமே அறிவித்துள்ளன.இங்கிலாந்து பயிற்சியாளர் சௌத் கேட் வெளியிட்ட வீரர்கள் பட்டியலில் கோல்கீப்பர் ஜோ ஹார்ட்டினே, நடுகள ஆட்டக்காரர் ஜாக் வில்ஷெரி ஆகியோர் இடம்பெறவில்லை. தற்போது அறிக்கப்பட்டுள்ள இறுதி பட்டியலில் செல்ஸி அணிக்காக விளையாடிவரும் ஹாரி காஹில்,லிவர்பூல் அணியின் அலெக்சாண்டர் அர்னால்டு ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

2012, 2016 யூரோ கோப்பை,2014 உலகக் கோப்பை போன்ற தொடர்களில் பங்கேற்ற அனுபவ வீரர் கோல்கீப்பர் ஜோ ஹார்ட்டினே சமீபத்தில் நடந்து முடிந்த ஐரோப்பிய லீக் ஆட்டங்களில் சரியாக விளையாடாத காரணத்தினாலேயே நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.ஐரோப்பிய லீக் சீசனில் 19 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜோ ஹார்ட்டினே 39 கோல்களை விட்டுக் கொடுத்துள்ளார்.இதனால் ஹார்ட்டினுக்குப் பதிலாக ஜோர்டான் பிக்போர்டு கோல்கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குரூப் ’ஜி’-யில் துனிசியா,பனாமா,பெல்ஜியம் ஆகிய அணிகளுடன் இங்கிலாந்து அணி இடம்பெற்றுள்ளது.இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் துனிசியாவை ஜூன் 18-ஆம் தேதி எதிர்கொள்கின்றன.இங்கிலாந்து அணி விபரம்: கோல்கீப்பர்கள்- ஜாக் பட்லண்ட், ஜோர்டான் பிக்போர்டு, நிக் போப்

எதிர்ப்பு ஆட்டக்காரர்கள்: அலெக்சாண்டர் அர்னால்டு, ஹாரி காஹில், கெயில் வாக்கர், ஜான் ஸ்டோன்ஸ், ஹாரி மக்வேர், கீரன் ட்ரிப்பியர், டானி ரோஸ், பில் ஜோன்ஸ், ஆஸ்லி யங்.

நடுகள வீரர்கள்: எரிக் டயர், டெலே ஆலி, ஜெஸே லிங்கார்டு, ஜோர்டான் ஹென்டேர்சன், ஹாபியன் டெல்ப்,ரூபன் லோப்ட்டன் சிக்.

முன்களஆட்டக்காரர்கள்: ஜாமி வார்டி, மார்க்கஸ் ராஷ்ஹட், ரஹீம் ஸ்டெர்லிங், ஹாரி கெய்ன்.

இரண்டாவது உலகக் கோப்பை
இரண்டாவது உலகக் கோப்பை போட்டிகள் இத்தாலியில் நடைபெற்றது.1934-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன.இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணி செகோஸ்லோவேகியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.இத்தாலி அதிபர் முசோலினி அனைத்து ஆட்டங்களையும் காண வந்திருந்தார்.இத்தாலி – ஸ்பெயின் அணிகளுக்கிடையேயான அரையிறுதி ஆட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது.மொத்தம் 210 நிமிடங்கள் ஆட்டம் நடைபெற்றது. லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்காக ஆயுட்கால தடைபெற்றிருந்த இத்தாலி வீரர் அல்லமான்டியோ இத்தாலி அணியின் அன்றைய கேப்டனாக இருந்தார். இந்த ஆட்டத்தில் இத்தாலி பெற்ற வெற்றியை தனது பாசிஸக் கொள்கைகளைப் பரப்புவதற்கு முசோலினி பயன்படுத்திக் கொண்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.