தாராபுரம்,
தாராபுரம் விவேகம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்த மாணவர்களை பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் கௌரவித்தனர்.

குறிப்பாகஇப்பள்ளியின் மாணவிஎஸ்.எஸ்.நிவேதா 1200 க்கு 1186 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துசாதனை படைத்துள்ளார். கே.எஸ்.ஷீஜா ஃபிதுர் 1179 மதிப்பெண்கள் பெற்றுஇரண்டாம் இடம் பெற்றுள்ளார். சி.திலபருணி, என்.பிரபாவதி, கே.சிந்துஆகியோர் 1178 மதிப்பெண்கள் பெற்று முன்றாம் இடம் பெற்றுள்ளனர்.எஸ்.எஸ்.நிவேதா, கே.சிந்து, டி.மோகனபிரியா ஆகியோர் முன்றுபாடங்களில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றும், ஜி.நந்தனாதேவி,இ.திவ்யா, எஸ்.அன்பரசி, இ.கவிப்பிரியா, எஸ்.ஸ்ரீநிதி ஆகியோர் இரண்டுபாடங்களில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 1170 க்கும் மேல் 12மாணவ, மாணவிகளும், 1150 க்கும் மேல் 33 மாணவ, மாணவிகளும், 1100க்கும் மேல் 136 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து, பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், தாராபுரம் விவேகம் பள்ளியில் எம்பிபிஎஸ் சேர நீட் நுழைவு தேர்வு பயிற்சி வகுப்புகள் பள்ளியிலேயேநடைபெறுகிறது. நுழைவு தேர்வு பயிற்சியில் பல ஆண்டுகள்அனுபவம்மிக்க ஆசிரியர்களால் ஆண்டு முழுவதும் ப்ளஸ் 1, ப்ளஸ் 2மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. ப்ளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான நீட் ரிப்பீட்டர்கோர்ஸ் ஒரு ஆண்டு பயிற்சி தனியாக நடத்தப்படுகிறது. என்சிஇஆர்டிபாடத்திட்டம் முழுமையும் உள்ளடக்கிய தனிதன்மை வாய்ந்த பாடநூல்கள்தமிழ் மற்றும் ஆங்கில வழிப்பயிற்சிகள் பாடப்பகுதியின் ஒவ்வொருஉட்பிரிவுகளிலும் தனிகவனம், விரைவாகவும், துல்லியமாகவும் விடையளிக்க ஏற்றவகையில் நுணுக்கங்களை உள்ளடக்கிய பயிற்சிஅலகுத் தேர்வுகள் தேர்வுகளுக்கு பின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தல்முன்கூட்டியே திட்டமிட்ட கால அட்டவணைப்படி வகுப்புகள் பாடபகுதிகளை ஆசிரியர் மேற்பார்வையில் முடிக்கவைத்தல் மற்றும்பொதுத்தேர்வு மதிப்பெண், நுழைவுத்தேர்வு இரண்டிலும் சிறப்பிடம் பெறும்வகையில் திட்டமிட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

முன்னதாக, இப்பள்ளியில் பயின்று ப்ளஸ் 2 தேர்வில்சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் சுப்பிரமணியன்,செயலாளர் பூபதி, அறக்கட்டளை உறுப்பினர்கள் கனகராஜ், ராமசாமி,நடராஜன், விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் நடராஜன், தலைமைஆசிரியை உமா மகேஸ்வரி ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: