திருப்பூர்,
திருப்பூர் ஸ்கேட்டிங் வீரர்கள் கேரளாவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்றனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைச்சுர் கேரளா ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் மே 11 முதல் 13 ம் தேதி வரை தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி ஜோ ஸ்கேட்டிங் அகடாமி சார்பில் வீரர்கள் கலந்து கொண்டனர். இவற்றில் வீரர்கள் சஞ்சய் ராஜ்குமார், சஞ்சாய், பிரனீஷ் ஆகியோர் தலா இரண்டு தங்க பதக்கங்களும் வீரர் சர்வேஷ் வெள்ளி பதக்கமும் வென்றனர். தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற வீரர்களை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பாராட்டினார். மேலும், பல சாதனைகள் புரிய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜா.பியுலா ஜேன் சுசிலா மற்றும் பயிற்சியாளர் ஜோதிபாசு ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: