கோவை,
ரேசன் அரிசியை ரயிலில் கடத்த முயற்சி,300 கிலோ ரேசன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த இருப்பதாக மாவட்ட பறக்கும் படை அதிகாரிகளுக்கு வந்த தகவலின் அடிப்படையில் பறக்கும் படை அதிகாரிகள் புதனன்று வடகோவை ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். வட்டாட்சியர் கணேஷ் தலைமையில் நடைபெற்ற சோதனையில் ஈரோடு-பாலக்காடு பாசிஞ்சர் ரயிலில் ஏற்றுவதற்காக, நடைமேடையில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மொத்த எடை 300 கிலோவாகும். நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னும் ரேசன் அரிசியை உரிமை கோர யாரும் வராத நிலையில் இது கடத்தல் அரிசி என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.பின்னர் பறக்கும் படை அதிகாரிகள் அனைத்து ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply