கொல்கத்தா:
கள்ள ஓட்டு போடுவதைத் தடுத்த தேர்தல் அதிகாரியான ஆசிரியரை கொடூரமாக தாக்கிய திரிணாமுல் குண்டர்கள் ரயில் முன்பு அவரை தள்ளி கொலை செய்துள்ளனர்.

கடுமையாக தாக்குதலுக்கு உள்ளான பிறகும் தேர்தல் பணியை முடித்த ராஜ்குமார் ராய் என்கிற அந்த ஆசிரியர் தேர்தலுக்குப்பிறகு மாயமானார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவரது சடலம் ராய்கஞ்ச் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கொல்லப்பட்ட நிகழ்வுகளில்கூட தேர்தல்

ஆணையம் மவுனம் கலைத்து எதையும் கூறத் தயாராகவில்லை. வாக்குப்பதிவு நடந்த அன்றைய தினம் மட்டும் 7 சிபிஎம் ஊழியர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். கள்ள ஓட்டு போடும் வீடியோக்களை வெளியிட்டும், வாக்குப்பதிவு மையத்தில் திரிணாமுல் குண்டர்கள் துப்பாக்கிகளோடு வந்த செய்திகளுக்கு சான்றுகள் உள்ள போதிலும் எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை.வாக்களிக்க வந்தவர்களை வன்முறையாளர்கள் ஆயதங்களை பயன்படுத்தி தடுக்கவும், கொடூரமாக தாக்குதல் நடத்தவும் செய்த ஏராளமான செய்திகள் தேர்தலன்று வெளியாகின.

Leave a Reply

You must be logged in to post a comment.