திருப்பூர்,
திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் புதனன்று மின்சாரம் தாக்கி இரண்டு கூலி தொழிலாளர்கள் சம்பவ இடத்திலிலேயே பலியாகினர்.

சாமுண்டிபுரம் பகுதியில் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிடத்தில் வர்ணம் அடிக்கும் பணிக்காக திருப்பூர் சாமுண்டி புரம் பகுதியை சேர்ந்த ராஜாமணி, கோவை ரத்தினபுரியை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி மற்றும் காங்கயம் சாலை பகுதியை சேர்ந்த ராஜா ஆகியோர் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், ராஜாமணி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் 3 வது மாடியில் உள்ள சுவற்றை அளப்பதற்காக சில்வர் டேப் மூலம் அளந்துகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெளியே சென்று கொண்டிருந்த மின்சார கம்பியின் மீது உரசியதில் ராஜாமணி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலிலேயே பலியாகினர். தகவலறிந்த 15 வேலம்பாளையம் காவல் துறையினர் இருவருரின் உடலை கைபற்றி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சாய்ந்து கிடந்த மின்கம்பம்:
மேலும், அந்த பகுதி மின்கம்பம் சில நாட்களாக பெய்து வரும் மழைக்கு ஆபத்தான நிலையில் சாய்ந்துள்ளது. மின்சார வாரியத்திடம் பொதுமக்கள் வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அந்த கம்பத்தை சாய்ந்த உடனே சரி செய்திருந்தால், இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் என அங்குள்ள பொதுமக்கள் கூறினர்.

Leave A Reply

%d bloggers like this: