பழனி:
பழனி முருகன் கோவில் சிலை மோசடி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் முன்னாள் ஆணையர் தனபால் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிலை முறைகேடு தொடர்பாக சிலை கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் பழனியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் ஸ்தபதி முத்தையா, கோயில் முன்னாள் இணை ஆணையர் கே.கே. ராஜா, முன்னாள் இணை ஆணையர் புகழேந்தி, நகை சரிபார்க்கும் அதிகாரி தேவேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் முன்னாள் ஆணையர் தனபாலிடம் விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் தனபாலின் வீடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவாகியுள்ள தனபாலை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: