சென்னை:
பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி தற்போது கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

இதற்கிடையே, ஆளுநர் அமைத்த விசாரணை அதிகாரி சந்தானம் தனது விசாரணை
அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்தார். இந்நிலையில், சிபிசிஐடி வசமுள்ள இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி ஜி.எஸ். மணியன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை மே 16 புதனன்று விசாரித்த நீதிபதிகள், ஒரு புலனாய்வு அமைப்பின் விசாரணை முடியாத போதே, அது சரியில்லை என எப்படி கூறமுடியும்? என கேள்வி  எழுப்பிய நீதிபதிகள் ,மனுவை தள்ளுபடி செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.