சென்னை:
தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரி
வித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:
தெற்கு கர்நாடகாவிலிருந்து தென் தமிழகம் வரை காற்றில் வேக மாறுபாடு நிலவும் என்றும், மாலத்தீவு பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்
படும் என்று தெரிவித்துள்ளது.

Leave A Reply