திருச்செங்கோடு,
திருச்செங்கோடு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஎம், சிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்செங்கோடு நகராட்சியில் நிரந்தர ஆணையாளரை நியமிக்க வேண்டும், திருச்செங்கோடு நகர் முழுவதும் சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும், துப்புரவு பணிகளில் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிட குறைபாட்டை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புதனன்று திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ நகர செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். சிபிம் நகர செயலாளர் ஐ.ராயப்பன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் மணிவேல், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஆதிநாராயணன், ஒன்றியச் செயலாளர் வேலாயுதம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இதில் நகர குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.