பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்தார்.

அதன்படி, ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் 1,103 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. ஆந்திரப் பிரதேசம் மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் 450 கோடி ரூபாய் மதிப்பில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கவும். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காசியாபாத் நகர் வரை இயக்கப்படும் மெட்ரொ ரயில் திட்டத்தை ரூ.1,967 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்பட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. என குறிப்பிட்டார்.

இதில், ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் 1,103 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், தமிழகத்தில் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை. இதனால் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

எய்ம்ஸ் அமையப்போவது மதுரையா? தஞ்சையா? என்பது இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் எய்ம்ஸ் இடம் தேர்வு செய்ய உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். இந்த குழுவினர் இடம் தேர்வுக்காக தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு பதில் பெற்று வருகின்றனர். இவர்கள் அறிக்கை அளித்த பின்னரே, முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காமல் மத்திய மாநில அரசுகள் காலம் தாழ்த்துவதாக சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: