சேலம்,
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி சதவிகித பட்டியலை மாவட்ட ஆட்சியர் ரோஹிணி புதனன்று வெளியிட்டார். இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.ஞானகௌரி பெற்றுக்கொண்டார்.

சேலம் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 19,441 மாணவர்களும், 20,859 மாணவிகளும் என மொத்தம் 40,300 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வில் 17,255 மாணவர்களும், 19,627 மாணவிகளும் என மொத்தம் 36,882 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தில் மாணவர்கள் 88.76 சதவிகிதமும், மாணவிகள் 94.09 சதவிகிதமும் என மொத்தம் 91.52 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.