திருநெல்வேலி:
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர்கள் 60சதவீத ஊதிய உயர்வு கோரியும்,ரூ.300 லீவு சம்பளம் கேட்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவிலில் 16ஆவது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே சங்கரன்கோவிலில் ஒருமுறை மற்றும் 3 நாட்களுக்கு, முன் நெல்லை தொழிலாளர் துறை துணை ஆணையர் அலுவலகத்தில் ஒருமுறை என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரண்டு முறையும் தொழிலாளர் துறை, சிஐடியு மற்றும் பிற தொழிற்சங்கம், விசைத்தறி உரிமையாளர்கள்  பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது, இந்நிலையில் வரும் 18ஆம் தேதி தொழிலாளர் துறை அலுவலகத்தில் மீண்டும் 3ஆவது தடவை பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இதற்கிடையே 16ஆம் தேதி விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி புதனன்று சங்கரன்கோவில் அசெம்பிளி லாட்ஜ் முன்பு சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

மறியல் போராட்டத்திற்கு   சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் ஆர்.கருமலையான் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.வேல்முருகன், விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.மாடசாமி, செயலாளர் ரத்தினவேலு, துணை செயலாளர் மாணிக்கம், பொருளாளர் ஆறுமுகம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உ.முத்துபாண்டியன், தாலுகா செயலாளர் பி.அசோக்ராஜ் ஆகியோர் பேசினர். மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.